Sunday, July 28, 2019

அம்மா லீலாவதி

எந்நேரம் யாம் வந்த போதும்
கண்களில் கரை புரளும் வாஞ்சை!
அன்னமிட்டு , ஆதரவாய் பேசி
உண்ண வைத்து உபசரித்து
கண்ணேறு கழித்து, ஆசிர்வதித்து
சென்று வா என்று சொலும் அன்னையே!
இனி எங்கே காண்பேன் உன்னையே?
புன்னகை மாறாத முகமெங்கே?
நெற்றியில் திருநீறிடும் கரமெங்கே?
வற்றாத அன்பு சொரியும் கண்ணெங்கே?
அன்பே சொல்லாய், அன்பே வாழ்வாய்,
அன்பே செயலாய், அன்பே உருவாய்
அரு வாழ்வு வாழ்ந்த அன்னையே!
உனை இழந்து என்ன செய்வோம் இனிமேல்?
அய்யா சென்றதும் அகம் நொந்து
அய்யாவைத்  தேடி அங்கு சென்றீரோ?
ஐயகோ என் செய்வோம் நாங்கள்?
தெய்வமாய் இருந்தீர்! தெய்மாகவே ஆனீர்!
இறையே விரும்பி உம்மை
இங்கே வா என்றழைத்துக்  கொண்டாரோ?
எங்கள் இதயத்தில் வீற்றிருக்கும் அன்னையே
என்றும் எம்மை காத்தருள்வீர்!
13May2019

No comments:

Post a Comment