Sunday, July 28, 2019

என் உயிர்

அளக்க முடியுமா அந்த துக்கத்தை?
அதிகபட்சத்தின் அளவுகோல் இது தானா?
அன்பே! எனைப் புரிந்து கொண்ட ஆருயிரே!
இன்னுயிர் துறந்தாய் என் இதயம் வெடிக்க!
அறிந்தும் அறியாப் பருவ திருமணம்,
ஆயினும் இணைந்தது நம் இருமணம்
கண்களைப் போல் இரண்டு செல்வங்கள்
கண்டு மகிழ்ந்தோம் பலப்பல தேசங்கள்
உழைத்தோம் உயர்ந்தோம்  உயர்வித்தோம்!
பெற்றோரை பேணிக் காத்தோம்.
ஓட்டு வீட்டில் வாழ்க்கையைத் தொடங்கினோம்
ஓரெட்டு வீடுகள் கட்டினோம் பின்னர் .
நீ வந்த பின் நினைத்தது நடந்தது.
அன்னையாய் , அன்புத் துணையாய்
சகோதரியாய், மகளாய், மருமகளாய்
எப் பணியும் சிறப்புற செய்தவளே!
என் நெஞ்சில் நிறைந்தவளே!
எங்கே சென்றாய் என்னை விட்டு?
சுத்தம் , சுகாதரம் நித்தம் காத்து,
எப்பொருள் எங்கென்று நியமம் வகுத்து
கேட்டதை நொடியில் எடுத்துத் தருவாயே!
விட்டு விட்டு எங்கே சென்றாய் நீ?
அருண் திருமணம் முடித்தேன்- உன்
ஆவல் படியே செய்தேன்!
அகிலாவின் வாழ்க்கையை அமைத்து
அதன் பின் வருவேன் உன்னிடம்!
குழந்தைகளைக் காப்பாய் ! குலதெய்வமாய் இருப்பாய்!
மழலை அருள் தந்து அவர் வாழ்வில் வளம் சேர்ப்பாய்!
கொஞ்சம் பொறு வந்து விடுவேன்!
26 June 2019





No comments:

Post a Comment