கிறுக்கல்கள்/SCRIBBLES
Sunday, June 28, 2020
கொரானா
Monday, October 14, 2019
பரிட்சை எழுதிய கதை!
1977 ஆம் வருடம். நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டியில் சேர்ந்து இளம் அறிவியல் வேதியியல் (BSc Chemistry)படித்து வந்தேன். முதல் பருவத் தேர்வுக்கு(semester) ஊருக்கு வந்திருந்தேன். கொஞ்ச நாள் விடுமுறை. படித்துக்கொண்டிருந்தேன். பின்னர் கல்லூரிக்கு சென்றேன்.
பரிட்சை எழுத அனுமதி சீட்டு ( hall ticket) வாங்கச் செல்லும் போது தான் தெரிந்தது கல்லூரி அடையாள அட்டையை வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன் என்று. அது இல்லாமல் அனுமதி சீட்டு தர இயலாது என்று கண்டிப்பாக கூறிவிட்டார்கள்.
சரி ஊருக்கு போய்விட்டு கடைசி பேருந்தில் திரும்பி வந்து விடலாம் என்று கிளம்பினேன்.
ஊருக்கு வந்தேன். நேரம் மாலை 6.00 மணி. கடைசி பேருந்து மாலை 6.30க்கு . துறையூருக்கு. பின் துறையூரிலிருந்து புத்தனாம்பட்டிக்கு கடைசி வண்டியை பிடிக்க வேண்டும்.
அடையாள அட்டையை தேடி எடுத்தேன் பின் உடனடியாக கிளம்புகிறேன் என்று சொல்லி பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன் கடைசி வண்டியை பிடிக்க . ஆனால் அன்று அந்த வண்டி வரவில்லை. என்ன செய்ய? வழக்கமாக விடியற்காலையில் 5:30 க்கு செல்லும் முதல் வண்டியில் சென்றால் போய்விடலாம் என்று தந்தை கூற, சரியென்று தங்கிவிட்டேன். கல்லூரியில் முதன் முதல் தேர்வு எழுதும் போது இத்தனை தடங்கல்களா என்று எண்ணிக் கொண்டே தூங்கி எழுந்தேன்.
அன்று பார்த்து 5:30 க்கு வர வேண்டிய வண்டி வரவில்லை. பேருந்துகள் மிகக் குறைவாக இருந்த காலம். நகரப்பேருந்துகளும்( town bus) மிகக் குறைவு .
அப்போது பால்ய நண்பர் மணி ஒரு யோசனை சொன்னார். ஆறு மணிக்கு மல்லியகரையில் இருந்து ஒரு வண்டி துறையூருக்கு இருக்கிறது. அதைப் பிடிக்கலாம் என்று தமது மிதிவண்டியை எடுத்து வந்தார். வேக வேகமாக மிதித்து இரண்டு கல் தொலைவில் உள்ள மல்லியகரை அழைத்துச் சென்றார். அந்த வண்டியும் அப்போதுதான் நான் கிளம்பி இருந்தது. அதை பிடிக்க முடியவில்லை. ஒன்றும் புரியவில்லை என்ன செய்வது என்றும் தெரியவில்லை அடுத்த வண்டி 8 மணிக்கு மேல்தான் வரும் அதைப் படித்தால் தேர்வு எழுத முடியாது.
அப்போது மணி சொன்னார் " சம்பத்து தம்மம்பட்டி போலாம் " என்றார். மல்லிய கரையில் இருந்து தம்மம்பட்டி 16 கல் தொலைவு. மலைப்பாங்கான சாலை . முடியுமா என்று தயங்கினேன். மணி. " வா போயிடலாம் , தம்மம்பட்டியிலிருந்து நிறைய வண்டிகள் துறையூருக்கு உண்டு" என்று கூறியவர் என்னை உட்கார வைத்து அந்த பழைய மிதிவண்டியில் அழைத்துக் கொண்டு சென்றார்.
அவ்வப்போது கொஞ்ச தூரம் நானும் மிதித்தேன். ஆனால் பெரும்பாலும் அவர் தான் மிதித்தார். விரைக்க விரைக்க தம்மம்பட்டி வந்து சேர்ந்தோம். துறையூருக்கு ஒரு வண்டி கிளம்பிக் கொண்டிருந்தது. அதை பிடித்து விட்டேன். சரியான நேரத்தில் வந்து சேர்ந்து தேர்வும் எழுதிவிட்டேன்.
அன்று அந்த தேர்வு எழுதாமல் இருந்திருந்தால் எனது சான்றிதழில் ஒரு புள்ளி விழுந்திருக்கும். வாழ்க்கையில் arrears என்ற மறு தேர்வு எழுதாத எனது சாதனை போயிருக்கும்.
எல்லா பாடத்திலும் "All pass " என்ற பெருமைக்காக கல்லூரி என்னை கெளரவித்தது போயிருக்கும். இதே காரணத்தால்தான் எனக்கு வேலைக்கான நேர்காணல் அழைப்பு கிடைத்தது; வேலையும் கிடைத்தது.
இத்தனைக்கும் காரணமான நண்பர் மணி படித்தது. 6 ஆம் வகுப்பு வரைதான்.
நன்றி மணி!
பின் குறிப்பு:
நண்பர் மணி தற்போது கொசுவலை உற்பத்தி தொழிற்சாலை நடத்தும் தொழில் அதிபர் .
மற்றும் ராசி பள்ளிக் குழுமத்தின் ஒரு இயக்குனர். மற்றும் பல பல.... அத்தனையும் உழைப்பு!
Sunday, July 28, 2019
Kindness exists!
"Thank you Sharif " I got down from the car and reached the apartment at third floor. After work I used to take shower and when I opened the tap, water was not coming. Being new to the place I have not stored any water for emergency as I was told there was 24 hours water supply. Also I did not have any sorage containers. The water from the tap is pure potable water you can drink directly!! I called Sharif, the driver assigned to me, and told him about the water. He told that some maintenance might be happening and probably be resuming later.
It was 5:00 p.m. I just changed the dress and sat in living room waiting for water.
I am in Kizilyurt, a small town in the Republic of Dagestan in the Russian Federation. There was a small cement factory facing quality issues. My friend Hasan asked my help. Earlier I visited in Oct-Nov 2018. Gave some suggestions which were duly accepted and implemented. They called me again.I suggested to find an apartment instead of hotel and I was provided with one.
Now to continue the story: By 6:30 p.m. I came down to find out actually what was going on about the water. In the Russian settlements - village, town or big cities- there will be always benches in front of the apartment entrances, walkways, parks etc. I saw an old woman- older than me- sitting. I asked her in Russian about the water issue. She also told that it should resume by 8:00 p.m. I retuned to the room and was waiting for the water to make supper.
By 8:00 p.m. I heard a knock in the front door. I was surprised because I was new and I did not expect any visitors. On opening the door I saw the same old woman carrying a six litre water bottle. She told me that the water might resume only by the next day and asked me to have this water. So thoughtful! I did not know what to say! I thanked her and took that. She asked if there were any empty bottles. I found two and she took them with her. After some time she came and asked me to go to ground floor to bring the water filled bottles as she could not climb three floors. She was living in the second floor. She went somewhere and brought water for a complete stranger! I was overwhelmed!
The water was helpful for the night and the next day morning.
I went to work . While returning after work in the evening she was sitting in the same bench. She smiled , we exchanged greetings. The water resumed. I went out to the supermarket for shopping. Bought a delicious cake & fruit juice and while returning I saw her sitting with friends. I offered her the cake and juice, she smiled and said she did not eat these! I requested her to accept and offer to her grandchildren! Reluctantly she took.
We meet daily now and exchange smiles and greetings!
Good people exist !
யாதும் ஊரே யாவரும் கேளிர்!
All places our own, everyone is our kin!
28 July 2019
அம்மா லீலாவதி
எந்நேரம் யாம் வந்த போதும்
கண்களில் கரை புரளும் வாஞ்சை!
அன்னமிட்டு , ஆதரவாய் பேசி
உண்ண வைத்து உபசரித்து
கண்ணேறு கழித்து, ஆசிர்வதித்து
சென்று வா என்று சொலும் அன்னையே!
இனி எங்கே காண்பேன் உன்னையே?
புன்னகை மாறாத முகமெங்கே?
நெற்றியில் திருநீறிடும் கரமெங்கே?
வற்றாத அன்பு சொரியும் கண்ணெங்கே?
அன்பே சொல்லாய், அன்பே வாழ்வாய்,
அன்பே செயலாய், அன்பே உருவாய்
அரு வாழ்வு வாழ்ந்த அன்னையே!
உனை இழந்து என்ன செய்வோம் இனிமேல்?
அய்யா சென்றதும் அகம் நொந்து
அய்யாவைத் தேடி அங்கு சென்றீரோ?
ஐயகோ என் செய்வோம் நாங்கள்?
தெய்வமாய் இருந்தீர்! தெய்மாகவே ஆனீர்!
இறையே விரும்பி உம்மை
இங்கே வா என்றழைத்துக் கொண்டாரோ?
எங்கள் இதயத்தில் வீற்றிருக்கும் அன்னையே
என்றும் எம்மை காத்தருள்வீர்!
13May2019
என் உயிர்
அளக்க முடியுமா அந்த துக்கத்தை?
அதிகபட்சத்தின் அளவுகோல் இது தானா?
அன்பே! எனைப் புரிந்து கொண்ட ஆருயிரே!
இன்னுயிர் துறந்தாய் என் இதயம் வெடிக்க!
அறிந்தும் அறியாப் பருவ திருமணம்,
ஆயினும் இணைந்தது நம் இருமணம்
கண்களைப் போல் இரண்டு செல்வங்கள்
கண்டு மகிழ்ந்தோம் பலப்பல தேசங்கள்
உழைத்தோம் உயர்ந்தோம் உயர்வித்தோம்!
பெற்றோரை பேணிக் காத்தோம்.
ஓட்டு வீட்டில் வாழ்க்கையைத் தொடங்கினோம்
ஓரெட்டு வீடுகள் கட்டினோம் பின்னர் .
நீ வந்த பின் நினைத்தது நடந்தது.
அன்னையாய் , அன்புத் துணையாய்
சகோதரியாய், மகளாய், மருமகளாய்
எப் பணியும் சிறப்புற செய்தவளே!
என் நெஞ்சில் நிறைந்தவளே!
எங்கே சென்றாய் என்னை விட்டு?
சுத்தம் , சுகாதரம் நித்தம் காத்து,
எப்பொருள் எங்கென்று நியமம் வகுத்து
கேட்டதை நொடியில் எடுத்துத் தருவாயே!
விட்டு விட்டு எங்கே சென்றாய் நீ?
அருண் திருமணம் முடித்தேன்- உன்
ஆவல் படியே செய்தேன்!
அகிலாவின் வாழ்க்கையை அமைத்து
அதன் பின் வருவேன் உன்னிடம்!
குழந்தைகளைக் காப்பாய் ! குலதெய்வமாய் இருப்பாய்!
மழலை அருள் தந்து அவர் வாழ்வில் வளம் சேர்ப்பாய்!
கொஞ்சம் பொறு வந்து விடுவேன்!
26 June 2019
Saturday, February 16, 2019
இறுதி மடல்!
ராணுவ வீரனின் மடல்!
எந்த நொடியில் மரணம் நேரும்
என்பதை அறியாமல் எங்கோ செல்கிறோம் நெஞ்சில் எம்மைச் சுமந்த பெற்றோர், கொஞ்சிக் கொஞ்சிக் குலாவிய குழந்தை, அன்பே உருவாய் அருள் நிறை மனையாள், ஆதரவு காட்டும் அருமை நண்பர்,
எல்லாம் துறந்து எங்கோ செல்கிறோம்! எப்போது எது நடக்கும் ? யாருக்குத் தெரியும்? அரசியல் சதுரங்க விளையாட்டில், சிப்பாய் அப்பாவிகள் அழிவது எப்போது நிற்கும்? மனிதனை மனிதன் ஏன் வெறுக்க வேண்டும்? மனிதனை மனிதன் ஏன் கொல்ல வேண்டும்?
கடும் பணியிலும் கொடுங் குளிரிலும்
முகம் தெரியா எதிரியுடன் மோதுகிறோம்.
அடுத்த விடுப்பில் செல்லும் போது அன்னைக்கு புடவை எடுக்க வேண்டும், அப்பாவிற்கு கடிகாரம் கட்ட வேண்டும்,
குட்டிப் பாப்பாவிற்கு தங்கச்சரடும்,
எட்டிப் பார்க்கும் என்னவளுக்கு கொட்டிக் கொடுக்க வேண்டும் அன்பை!
ஐயகோ அங்கே வருவதென்ன?
அக்கினிப் பிழம்பாய் வெடிக்கிறதே?
அனலும் அளவிலா நெருப்பால்
குழந்தை புரண்ட நெஞ்சம்
குப்பென்று பற்றி எறிகிறது!
அம்மா அம்மா அருகில் வா!
அப்பா அப்பா எங்கே நீங்கள்?
இன்பத்திலும் துன்பத்திலும் என்னுடன் இருந்தவளே
என்னை எனக்கே புரிய வைத்த நல்லவளே உன்னை விட்டு செல்லப் போகிறேன் கண்மணி என்னை மன்னித்து விடு! பொறுப்புகள் விட்டுச் செல்கிறேன்
கருத்துடன் மகனை காப்பாற்று.
கிழவர் பதறாமல் பார்த்துக் கொள்
கிழவி புலம்புவாள் பொறுத்துக் கொள்! கண்ணே ! கருவிழியாளே! கற்புக்கரசியே! உன்னை விட்டுச் செல்கிறேன்!
என்னை மன்னித்து விடு